தமிழகம்

தமிழகத்தில் மின்வெட்டு அறவே இல்லை: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விளக்கம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் மின்வெட்டு அறவே இல்லை. அப்படி இருப்பதாகக் கூறினால் மக்கள் எள்ளி நகையாடுவார்கள் என மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று கைத்தறி, கதர், தொழிலாளர் நலன், ஊரகத் தொழில்கள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் க.ராமச்சந்திரன் (குன்னூர்), நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் மின்வெட்டு இருப்பதாக கூறினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ‘‘திமுக உறுப்பினர் ராமச்சந்திரன் எந்த உலகத்தில் வாழ்கிறார் என்பது தெரியவில்லை. தமிழகத்தில் மின்வெட்டு என்பது அறவே இல்லை. சில நேரங்களில் தேவைக்கும் அதிகமாக மின்சாரம் உற்பத்தியாகிறது. தமிழகத்தில் மின்வெட்டு இருப்பதாகக் கூறினால் மக்கள் எள்ளி நகையாடுவார்கள். ஸ்விட்சை போட்டுப் பார்த்தால் மின்சாரம் இருக்கிறதா, இல்லையா என்பது தெரிந்துவிடுமே’’ என்றார்.

SCROLL FOR NEXT