தமிழகத்தில் 60 சதவீத குவாரிகள் 2 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளன. இதனால் 2 லட்சம் தொழிலாளர்கள் குவாரி வேலைக்காக வெளிமாநிலங்களுக்குச் சென்றுவிட்டதாக தமிழ்நாடு கல்லுடைக்கும் தொழிற்சங்க நிறுவனத் தலைவர் ஞானமணி தெரிவித்தார்.
இச்சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் சேகர் தலைமை வகித்தார்.
மாவட்ட அமைப்பாளர் சக்தி வேல் வரவேற்றார். பொதுச்செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் சுப்பிர மணியன் முன்னிலை வகித்தனர். நிறுவனத் தலைவர் ஞானமணி, சி.ஐ.டி.யூ. செயலாளர் கணேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் மூடிக்கிடக்கும் கல் குவாரிகளைத் திறக்க வேண்டும். குவாரி களை குத்த கைக்கு விடுவதில் சுயஉதவிக் குழுக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
வாரியம் மூலம் வழங்கும் இழப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்தை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்பன உட்பட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன.
கல்லுடைக்கும் தொழிற்சங்க நிறுவனத் தலைவர் ஞானமணி கூறுகையில், தமிழகத் தில் 60 சதவீத குவாரிகள் மூடப்பட்டுள்ளதால், 2 லட்சம் தொழிலாளர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர்.
வாரியத்தில் உறுப்பினராவதற்கு கிராம நிர்வாக அலுவலர் சான்றுபெற வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும் என்றார்.