தமிழகம்

தேனி ஆவின் தலைவராக ஓ.ராஜா பதவியேற்பு

செய்திப்பிரிவு

தேனி ஆவின் தலைவராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

தேனி ஆவினில் உள்ள 17 உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று நடைபெற்றது.

தலைவர் பதவிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா, துணைத்தலைவர் பதவிக்கு செல்லமுத்து ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர். வேறுயாரும் போட்டியிடாததால் இருவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தலைவராக ஓ.ராஜா பதவியேற்றார்.

SCROLL FOR NEXT