தமிழகம்

மத்திய அரசு திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் மோசமாக உள்ளது: நாமக்கல் எம்.பி. குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசு திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் மோசமான நிலையில் இருப்பதாக நாமக்கல் எம்.பி. சாடியுள்ளார்.

கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் எம்.பி.சின்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.250 கோடி மதிப்பில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சின்ராஜ் எம்.பி. கட்டிமுடிக்கப்பட்ட 950 வீடுகள் மிகவும் மோசமாக இருப்பதாகத் தெரிவித்தார். இதனால் இந்த வீடுகளை மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார்.

“கட்டிமுடிக்கப்பட்ட, கட்டப்படும் கட்டிடங்கள் சுமார் ரூ.225 கோடி ஆகிறது. 960 வீடுகள் பயன்பாட்டுக்கு தயார் என்று சொல்லியிருக்கிறார்கள், ஆனால் இந்த 960 வீடுகளும் மிகவும் மோசமாக இருக்கிறது.

அதே போல் இப்போது கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்களையும் நேரில் சென்று பார்த்தேன், மோசமாகவே உள்ளது, இது முழுப் பயன்பாட்டுக்கு வந்ததென்றால் 5-10 ஆண்டுகளில் நிச்சயம் இடிந்து விழுந்து விடும், அந்த அளவுக்குத்தான் அந்தக் கட்டிடம் இருக்கிறது.

அதாவது இன்னும் பயன்பாட்டுக்கே வரவில்லை ஆனால் அதற்குள் சேதம் அடைந்துள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT