மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். 
தமிழகம்

குடியுரிமைச் சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது: திருப்பரங்குன்றத்தில் பிரேமலதா பேச்சு

செய்திப்பிரிவு

திருப்பரங்குன்றத்தில் தேமுதிக சார்பில் மகளிர் தின விழா பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் விஜயகாந்த் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில், கட்சியின் பொரு ளாளர் பிரேமலதா பேசியதாவது:

மீனாட்சியம்மனின் அருளால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை தேறி வருகிறார். இனிமேல் அவர் கட்சிக் கூட் டங்களில் பேசுவார். அவர் முதல்வ ரானால் அனைத்துத் துறைக ளிலும் மகளிருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவார்.

‘டிக்டாக்’ செயலியை பெண்கள் பயன்படுத்தக் கூடாது. இதை பயன்படுத்துவதால் குடும்பங் களில் பாதிப்பு ஏற்படுகிறது.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது.

2021-ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தேமு திக வெற்றி பெற்று விஜயகாந்த் முதல்வராவார். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், கட்சியின் துணை பொதுச்செயலாளர் சுதீஸ், நிர்வாகிகள் கவியரசு, சிவமுத்துக் குமார், அழகர், முஜிபுர் ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT