ஆண்களுக்கு பெண்களை மதித்து நடக்கவும் கற்று கொடுத்தாலே சம நீதி, சம உரிமை என்பது சாத்தியப்படும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள வாழ்த்து பதிவில் கூறியுள்ளதாவது:
“பெண்களுக்கு பாதுகாப்பும், சம உரிமையும் என்ற முழக்கத்தோடு பெண்களுக்கு பாரபட்சமின்றி வாய்ப்புகளும், ஆண்களுக்கு பெண்களை மதித்து நடக்கவும் கற்று கொடுத்தாலே சம நீதி, சம உரிமை என்பது சாத்தியப்படும். தினசரி இந்தச் சவால்களை தகர்த்தெறிகின்ற வீரப் பெண்மணிகளுக்கு என் மகளிர் தின வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.