பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

மருத்துவமனையில் நோயாளி போல் நடித்து செல்போன் திருடிய வாலிபர் கைது

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நோயாளி போல் நடித்து செல்போன் திருடிய விழுப்புரம் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணன்(49), இவர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரை பார்க்க நேற்று இரவு மருத்துவமனைக்கு வந்துள்ளார், பார்வையாளர் அறையில் அமர்ந்து இருந்த போது கிருஷ்ணனின் விலை உயர்ந்த செல்போன் திருட்டு போனது, இது குறித்து அவர் தன்வந்திரி நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கோரிமேடு போலீஸார் ஜிப்மர் மருத்துவமனை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர், அவர்கள் நோயாளிகள் தங்கும் அறை அருகே சந்தேகபடும்படியாக சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த முகமது இர்பான்(29) என்பதும் நோயாளி போல் நடித்து செல்போன்கள் திருடி வந்ததாக ஒப்பு கொண்ட அவனிடம் இருந்து மருத்துவமனையில் திருடப்பட்ட 3 விலை உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்து முகமது இர்பான் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

SCROLL FOR NEXT