தமிழகம்

கடலூர் மாவட்டத்தில் 17 காவல் நிலையங்களில் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்கும் பெண் ஆய்வாளர்கள்: கட்டப் பஞ்சாயத்து குறைந்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் பாராட்டு

செய்திப்பிரிவு

மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது, கடலூர் மாவட்ட காவல் நிலையங்களில் சட்டம் ஒழுங்கு பெண் ஆய்வாளர்கள் அதிகமாக உள்ளனர். இவர்கள் நிர் வகிக்கும் காவல் நிலையங்களில் கட்டப் பஞ்சாயத்து குறைந்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ளகாவல் நிலையங்கள் 46. இதில் 8 காவல் நிலையங்கள் உதவி ஆய்வாளர் நிலையில் இயங்குகின்றன. இதுதவிர 6 மகளிர் காவல் நிலையங்கள் இயங்குகின்றன. மகளிர் காவல் நிலையங்களை, மகளிர் ஆய்வாளர் ஒருவர் கையாள்வது என்பது எளிது.

அதே நேரத்தில் பெரும்பான்மையாக ஆண் காவலர்கள் பணியாற்றும், பலதரப் பட்ட பிரச்சினைகளை கையாளக்கூடிய பொது காவல் நிலையங்களில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர்களாக பெண்கள் பணியாற்றுவது சற்று கடினம். ஆனால்கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண் காவல் ஆய்வாளர்கள் அதை இலகு வாகச் செய்கின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 46 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களில், 17 காவல் நிலையங்கள் பெண் ஆய் வாளர்கள் கட்டுப்பாட்டில் இயங்கி வரு கின்றன.

சிறுபாக்கம், ராமநத்தம், திட்டக்குடி, புதுப்பேட்டை, காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம், நெய்வேலி தெர்மல், நெய்வேலி மந்தாரக்குப்பம், வேப்பூர், புதுச்சத்திரம், ரெட்டிச்சாவடி, பரங்கிப் பேட்டை, ஊமங்கலம், புவனகிரி, மருதூர்,பெண்ணாடம், குமராட்சி. இதில் சிறுபாக் கம், முத்தாண்டிக்குப்பம், மருதூர் காவல்நிலையங்களை ஒரே ஆய்வாளர் நிர் வாகம் செய்கிறார். மொத்தத்தில் 15 பெண்காவல் ஆய்வாளர்கள் 17 காவல் நிலை யங்களை நிர்வகிக்கின்றனர்.

பெண் ஆய்வாளர்கள் தலைமையில் இயங்கும் இந்தக் காவல் நிலையங்களில் பணிபுரியும் ஆண் காவலர்களிடம் கேட் டதற்கு, "எங்களைப் பொருத்தவரை பெரியவித்தியாசமில்லை. சந்தேகக் கைதிக ளிடம் விசாரணை நடத்தும் போது வார்த்தைகளில் கடுமை இல்லை. முக்கிய அரசியல் பிரமுகர்கள் கூட்டம் சற்றுக் குறைந்திருக்கிறது. குறிப்பிட்ட காவல் நிலையங்களைத் தாண்டி, காவல் மேலதிகாரிகளிடம் சென்று பொது மக்கள்புகார் கொடுப்பது, முதல்வர் தனிப்பிரி வுக்கு புகார் அளிப்பது போன்ற சம்பவங் கள் தற்போது குறைந்திருக்கிறது. காவல் நிலையத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள நாள்தோறும் அறிவுறுத்துகின்றனர்'' என்று கருத்து தெரிக்கின்றனர்.

உடனடித் தீர்வு

இந்த பெண் காவல் ஆய்வாளர்களின் விசாரணை தொடர்பாக இப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களிடம் கேட்டதற்கு, "பெண்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடியாக தீர்வு கிடைக்கிறது. கட்டப் பஞ்சாயத்து செய்வதில்லை. அவர்களது அணுகுமுறையிலும் மிகுந்த மரியாதை காணப்படுகிறது. இதுதவிர காவல் நிலையத்திற்குச் சென்றால் செலவாகும் என்ற அச்சம், பெண் ஆய்வாளர்களால் மக்களிடையே குறைந்து வருகிறது'' என்று தெரிவிக்கின்றனர். பெரும்பான்மையாக ஆண் காவலர்கள் பணியாற்றும், பலதரப்பட்ட பிரச்சினைகளை கையாளக்கூடிய பொது காவல் நிலையங்களில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர்களாக பெண்கள் பணியாற்றுவது சற்று கடினம். ந.முருகவேல் 


SCROLL FOR NEXT