திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கட்சியே வாழ்க்கையாக வாழ்ந்தவர். 43 ஆண்டுகள் பொதுச்செயலாளராக இருந்தவர். எனவே, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அவரது உடல் சிறிது நேரமாவது அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று தொண்டர்கள் எதிர்பார்த்தனர்.ஆனால், அப்போலோ மருத்துவமனையில் இருந்து அவரதுஉடல் நேராக கீழ்ப்பாக்கம் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது திமுக தொண்டர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.