நெய்வேலி என்எல்சியில் பணியாற்றும் நிரந்தர தொழிலா ளர்கள் அனைவரும் ஊதிய மாற்று ஒப்பந்ததை அமல்படுத்தக்கோரி கடந்த மாதம் 20ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத் ததில் ஈடுபட்டுள்ளனர். இன்று 25வது நாளாக வேலை நிறுத்தம் நீடிக்கிறது.
இந்நிலையில் தொமுச தலை வர் திருமாவளவன் பணி நீக்கம் செய்யப்பட்டதால் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக 14ம் தேதி (நாளை) காலை 8 மணிக்கு நெய்வேலி மெயின் பஜார் அருகில் உள்ள காமராஜர் திடலில் சாகும் வரை உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தொழில் சங்கத்தினர் தெரிவித்தனர். மேலும், முதலாவது அனல் மின்நிலையத்தில் 600க்கு பதில் 295 மெகாவாட்டும், முதலாவது அனல் மின் நிலைய விரிவாக்கத்தில் 420க்கு 420 மெகாவாட்டு, இரண்டாவது அனல் மின்நிலை யத்தில் 1470க்கு 1220 மெகா வாட்டும், இரண்டாவது அனல் மின் நிலைய விரிவாக்கத்தில் 500 மெகாவாட்டுக்கு 155 மெகாவாட்டும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், மொத்த மின் உற்பத்தியில் 900 மெகாவாட் குறைந்துள்ளது.