கம்பம் பள்ளத்தாக்கில் தண்ணீர் திருட்டைத் தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து தேனி ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள், பேராசை காரணமாக இயற்கை சுரண்டப்படுவது அதிகரித்து வருகிறது என வேதனை தெரிவித்தனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளை யம் கருங்கட்டான்குளம் நஞ்சை விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் விஜயராஜன் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு:
முல்லைப் பெரியாறு அணை கட்டுவதற்கு முன் கம்பம் பள்ளத் தாக்குப் பகுதி வைரவனாறு, சுருளி யாற்றின் மூலம் பாசன வசதி பெற்றது. தற்போது இப்பகுதியில் தண்ணீர் திருட்டு அதிகரித்துள்ளது.
இதனால் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி ஆயக்கட்டுதாரர்கள் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். நல்ல மழைப் பொழிவு இருந்தும் தண்ணீர் திருட்டு காரணமாக கடந்த 7 ஆண்டுகளாக இரண்டாம் போக சாகுபடி பாதிக் கப்பட்டு வருகிறது.
பெரியாறு நீர்ப் பாசனக் கால் வாய் மற்றும் கம்பம் பள்ளத் தாக்கில் உள்ள காமாட்சி புரம், சீப்பாலக் கோட்டை, ஓடைப் பட்டி, வெள்ளையம் மாள்புரம், தென் பழனி, எரசக்க நாயக்கனூர் உள் ளிட்ட பகுதிகள் மற்றும் ஆயக் கட்டு நிலங்களில் இருந்தும் நிலத் தடி நீர் குழாய்கள் மூலம் சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி களில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கவும், பெரியாறு அணையில் இருந்து குடிநீர்ப் பயன்பாட்டுக்குத் தவிர வேறு எந்தத் தேவைக்கும் ஜூன் 1-க்கு முன் தண்ணீர் திறக்கவும் தடை விதிக்க வேண்டும்.
கம்பம் பள்ளத்தாக்குக்கு வழங்கப்படும் தண்ணீர், பயன் படுத்தப்படும் தண்ணீர், குடிநீர் பயன்பாட்டுக்குத் தேவைப் படும் தண்ணீர் தொடர்பாக ஆய்வு செய்ய குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணி, மின் வாரியம், விவசாய சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய வல்லுநர் குழு அமைக்கவும், லோயர் கேம்ப் முதல் பழனிச்செட்டிபட்டி வரை பெரியாற்றுப் பாசனக் கால்வாயில் இருந்து சட்டவிரோதமாக நிலத்தடி நீர் மற்றும் ஆற்று நீர் திருடப்படுவது தொடர்பாக விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வழக்கறிஞர் லஜபதிராய், 10-க்கும் மேற்பட்டோர் தண்ணீர் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கெனவே வழக்குத் தொடரப்பட்ட போது விதிமீறல் கண்டறியப்பட்டால் நட வடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பி னும் தண்ணீர் திருடர்கள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை.
மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் குடிநீர்ப் பிரச்சினை இப்போதே தொடங்கி விட்டது. தண்ணீர் திருட்டு தொடர்ந்தால் மதுரை பெரியளவில் குடிநீர் பஞ்சத்தை சந்திக்கும், என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், மனிதனின் பேராசை காரணமாக இயற்கை முழுவதுமாக சுரண் டப்பட்டு வருகிறது. இனி தன்னிடம் வழங்குவதற்கு ஏதும் இல்லை என்ற நிலைக்கு இயற்கை வந்துவிட்டது. கொரோனா வைரஸ் நம் வாசற்படியில்தான் உள்ளது. இயற்கையைச் சுரண்டுவது தொடர்ந்தால் அனைவரும் பாதிக்கப்படுவோம், என்றனர்.
பின்னர், கம்பம் பள்ளத்தாக்கு ஆயக்கட்டுப் பகுதிகளில் நடை பெறும் தண்ணீர் திருட்டைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தேனி மாவட்ட ஆட்சியர், மதுரை பொதுப்பணித் துறைச் செயற்பொறியாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசா ரணையை மார்ச் 24-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.