குடிநீர், சாலை வசதி செய்து தரக்கோரி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சண்முகசுந்தரத்திடம் மனு அளித்த திமுக பொருளாளர் துரைமுருகன், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் நந்தகுமார். 
தமிழகம்

குடியுரிமை சட்ட பாதிப்பு குறித்து தமிழக முதல்வருக்கு நாங்கள் தமிழில் சொன்னது புரியவில்லை: துரைமுருகன் நையாண்டி

செய்திப்பிரிவு

குடியுரிமை சட்டத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து முதல்வருக்கு நாங்கள் தமிழில் கூறியது புரியவில்லை என்பதால் நாளை முதல் ஆங்கிலத்தில் கூறுகிறோம் என திமுக பொருளாளர் துரைமுருகன் நையாண்டியுடன் பதில் அளித்தார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்தை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். பின்னர், துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தொகுதி பிரச்சினைகள், தண்ணீர், சாலை வசதி கோரி மனு அளித்தோம். அது தொடர்பான விவரங்களை ஆட்சியரிடம் கொடுத்துள்ளோம். அணைக்கட்டு அருகேயுள்ள பீஞ்சமந்தைக்கு சாலை வசதி அளிக்கப்படும் என்று ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள கோயில்கள் தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதை கண்டிக்கிறேன். குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமி யர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று நாங்கள் இதுவரை தமிழில் கூறியிருந்தோம். அது அவருக்கு புரியவில்லை என்று நினைத்தால் நாளை முதல் ஆங்கிலத்தில் சொல்கிறோம்’’ என்று அவர் தனக்கே உரிய நையாண்டியுடன் பதில் அளித்தார்.

SCROLL FOR NEXT