மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் 
தமிழகம்

கரோனா வைரஸ்: சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை; மதுரை ஆட்சியர் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புபவர்களை சைபர் கிரைம் போலீஸார் கண்காணித்து வருவதாக, மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நேற்று (மார்ச் 5) நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், மதுரை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் விமான நிலையத்தில் இதுவரை 15 ஆயிரத்து 432 பயணிகளுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

கரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புபவர்களை சைபர் கிரைம் போலீஸார் கண்காணித்து வருவதாகவும், தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

"மக்களுக்கு பயம் ஏற்படும் வகையில் தவறான செய்திகளை பரப்புபவர்களை சைபர் கிரைம் போலீஸார் மூலம் கண்காணிக்க ஏற்கெனவே அரசு அறிவுறுத்தியிருக்கிறது. அவ்வாறு தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT