முத்தரசன்: கோப்புப்படம் 
தமிழகம்

'சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்று விடும்' என்பது போல போராட்டத்தைத் தடை செய்கிறது தமிழக அரசு: இரா.முத்தரசன் விமர்சனம்

செய்திப்பிரிவு

'சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்று விடும்' என்பது போல போராட்டத்தைத் தடை செய்வது மூலம் குடியுரிமை பிரச்சினையைத் தீர்க்க தமிழக அரசு முயற்சிக்கிறது என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக, மதுரை மேலூரில் நேற்று (மார்ச் 5) செய்தியாளர்களிடம் பேசிய இரா.முத்தரசன், "குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி திரும்பத் திரும்ப கூறி வருகிறார். அதே நேரத்தில், மத்திய அரசிடம் தமிழக அமைச்சர்களை அனுப்பி என்பிஆரில் கேட்கப்படுகின்ற கேள்விகளில் சிலவற்றைத் தவிர்க்கலாம் எனவும், அவற்றைத் தவிர்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என்றும் மனுவும் போடுகிறார். இந்த விவகாரத்தில் இரட்டை நிலையை முதல்வர் மேற்கொள்கிறார். இரட்டை நிலையை மேற்கொண்டு வெற்றி பெற முடியாது.

மேலும், சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களுக்குத் தடை விதிப்பதன் மூலமாகவும், 'திருமண விழாவில் சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணம் நின்றுவிடும்' என்பது போல தடை செய்வது, அச்சுறுத்துவது, மிரட்டுவது போன்றவற்றின் மூலமாகவும் இந்த பிரச்சினையைத் தடுத்து நிறுத்த முடியாது" என இரா.முத்தரசன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT