தமிழகம்

கூட்டணி ஆட்சி அமைய எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைய அனைத்து எதிர்க்கட்சி களும் ஒருங்கிணைய வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி தலை வர் திருமாவளவன் கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தனது 53-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். அவரது பிறந்த நாளையொட்டி கூட்டணி ஆட்சி கொள்கை மாநாடு சென்னை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடத்தப்பட்டது. தமிழக சட்டப் பேரவை போன்ற தோற்றத்தில் மேடையில் செட் அமைக்கப்பட் டிருந்தது.

மாநாட்டில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைய வேண் டும் என்ற கருத்தை வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி ஆகியோர் பேசினர்.

கூட்டணி ஆட்சி மாநாடு குறித்து திருமாவளவன் ‘தி இந்து’ விடம் கூறியதாவது: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி மலர வேண்டும். ஒரு கட்சி ஆட்சி ஒழிய வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து கூட்டணி ஆட்சி கொள்கை மாநாட்டை நடத்துகிறோம். 1952 முதல் இன்று வரை 3 கட்சிகள்தான் தமிழகத்தை ஆண்டிருக்கின்றன. அந்த 3 கட்சிகள் பின்னாடியே மற்ற கட்சிகள் செல்லுகிற அவலம் உள்ளது. எனவே, வாக்குகளுக் காக மட்டுமே கூட்டணி என்ற நிலைக்கு பதிலாக அதிகார பகிர்வுக்கான ஏற்பாடாக கூட்டணி முறை அமைய வேண்டும். இதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங் கிணைய வேண்டும். பொதுமக்க ளும் இதற்கு ஒத்துழைப்பு அளிப்ப துடன் சாதிய மற்றும் மதவாத சக்திகளை அடையாளம் கண்டு அவர்களை புறந்தள்ள வேண்டும். இதுவே எனது பிறந்த நாள் செய்தி யாகும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, தனது பிறந்த நாளை யொட்டி சென்னை அடையாறு, கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திருமாவள வன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் சென்னை சாந்தோமில் உள்ள காது கேளா தோர் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு அளித்த திருமாவள வன், அசோக் நகரில் உள்ள வி.சி.கட்சியின் வெளிச்சம் அலுவலகம், வேளச்சேரியில் உள்ள விசிக அலுவலகத்தில் தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

SCROLL FOR NEXT