தமிழகம்

ரஜினி வருகையால் எந்த ஒரு வேதிமாற்றமும் நிகழ்ந்து விடப்போவதில்லை: நாஞ்சில் சம்பத் கருத்து

செய்திப்பிரிவு

ரஜினியின் அரசியல் வருகையினால் எந்த ஒரு ரசாயன மாற்றமும் நிகழ்ந்து விடாது என்று திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கமலின் மையம் மையத்தில் இருக்கிறது என்றார்.

அவர் மேலும் கூறும்போது, “சேலத்துல இருந்து மேட்டூர் அணை தண்ணீர் இதுவரை வீணாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது என்று சொன்னால் இதுவரை ஏன் கொண்டுவரவில்லை?

இப்போது தேர்தல் காலத்தில் இதனைச் செய்து இதுபோன்ற மத்தாப்பு கொளுத்துகிற வேலையைச் செய்து விடலாம் என்று அவர்கள் பார்க்கிறார்கள். 234 தொகுதிகளிலும் அவர்கள் கடைசேர முடியாது என்பதுதான் நிதர்சனமானது.

கமலின் அரசியல் வருகை பற்றி ஏற்கெனவே தெரிந்து விட்டது, மையம் இப்போது மையத்தில் நிற்கிறது, ரஜினியின் அரசியல் வருகை தமிழ்நாட்டில் எந்த ரசாயன மாற்றத்தையும் உருவாக்க முடியாது.

ரஜினி ரசிகர்களே என் வயதைத் தாண்டியவர்கள், அவர்கள் என்ன செய்ய முடியும்? ஒன்றும் செய்ய முடியாது” என்று பேசினார் நாஞ்சில் சம்பத்.

SCROLL FOR NEXT