தமிழகம்

முதல்வர், அமைச்சர்கள் சொத்துப் பட்டியலை பகிரங்கமாக வெளியிட வேண்டும்: இரா.முத்தரசன் வலியுறுத்தல் 

இ.மணிகண்டன்

முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சொத்து விவரங்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற முத்தரசன் பின்னர் கூறியதாவது:

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட் டங்கள் நடக்கும் நிலையில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் மறுபரிசீலனைக்கே இடமில்லை என்று பிடிவாதமாக உள்ளனர்.

இதனால் மக்கள் மேலும் தீவிரமாகப் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். டெல்லியில் நடந்த வன்முறைக்கு பொறுப் பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும். தமிழகத்தில் கொலை, கொள்ளை மற்றும் பத்திரிகை யாளர்கள் தாக்கப்படுவது அதிகரித்துள்ளது.

முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தங்கள் சொத்து விவரங்களை பகிரங்கமாக வெளியிட வேண் டும். வருமான வரித் துறை நேர்மையானதாக இருந்தால், முதல்வர், அமைச்சர்களின் சொத்து விவரங்கள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும்.

தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளைப் பெற்றிருப்பது சாதனைதான். இந்த 11 மருத்துவக் கல்லூரிகளில் எந்த மாணவர்கள் படிக்கப் போகிறார்கள் என்பதற்கு முதல்வர் பதிலளிக்க வேண்டும்.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை உடைத்து தமி ழகத்தில் காலூன்றி விடலாம் என பாஜகவினர் நினைக்கின்றனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி முழு பலத்தோடு தேர்தலைச் சந்தித்து வெற்றி பெறும்.

‘மய்யம்’ என்ற நடுநிலை கொள்கை உலகத்திலேயே கிடையாது. ஒன்று இடதுசாரி, மற்றொன்று வலதுசாரி. இந்த 2 கொள்கைகள்தான் உள்ளன. ‘மய்யம்’ என்ற கொள்கையை கமல்ஹாசன் பரிசீலனை செய்தால் கூட்டணி பேசலாம் என்றார்.

SCROLL FOR NEXT