சரவண பெருமாள் 
தமிழகம்

திருச்சி அருங்காட்சியகத்தில் சிலைகள் திருடிய வழக்கில் 11 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த இளைஞர் கைது

செய்திப்பிரிவு

திருச்சி கோட்டை அருங்காட்சியகத்தில் 2009-ல் 31 சிலைகள் திருடு போயின. இதில், சிலை கடத்தல்தடுப்புப் பிரிவு காவல் துறையினர், 10 பேர் மீது வழக்கு பதிவுசெய்து 9 பேரை கைது செய்தனர். 31 பஞ்சலோக சிலைகளை மீட்டனர்.

இந்த வழக்கில் காரைக்குடி நெற்புகைபட்டியைச் சேர்ந்த சரவண பெருமாள்(40) என்பவரை தேடி வந்தனர்.

சிங்கப்பூரில் தலைமறைவாக இருந்து வந்த அவரை, நேற்று முன்தினம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் காவல் துறையினர் கைது செய்தனர். அவரை, கூடுதல் தலைமை குற்றவியல் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

பட்டுக்கோட்டையில் 8 ஆண்டுக்கு முன்பு நிதி நிறுவனம் ஒன்றில் 6 கிலோ நகையைத் திருடிய வழக்கிலும் இவர் தேடப்பட்டு வந்தார்.

SCROLL FOR NEXT