தமிழகம்

தேமுதிக சார்பில் ராமாக்காள் ஏரிக்கரையில் மரக்கன்றுகள் நடவு

செய்திப்பிரிவு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விரைவில் வரவுள்ளது. அதையொட்டி, நேற்று தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் (தேமுதிக) பாஸ்கர் தலைமையில் ராமாக்காள் ஏரிக்கரையில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. புங்கன், நாவல், வேம்பு, இலுப்பை உள்ளிட்ட ரகங்களைச் சேர்ந்த 64 மரக்கன்றுகள் நடப்பட்டது.

இதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினர் பாஸ்கர் கூறும்போது, ‘தருமபுரி தொகுதி முழுக்க 64 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. படிப்படியாக அடுத்த சில மாதங்களில் இந்த மரக்கன்றுகள் அனைத்தும் நட்டு முடிக்கப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்படும்’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், தேமுதிக மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர்கள் ராஜா, குமார், நிர்வாகிகள் வெங்கட்ராஜ், பாணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

          
SCROLL FOR NEXT