தமிழகம்

மதுரை தமுக்கம் மைதானத்தில் மாநில அளவிலான கபடி விளையாட்டுப் போட்டிகளுக்கான கால்கோள் விழா: அமைச்சர்கள் பங்கேற்பு 

சுப.ஜனநாயகச் செல்வம்

மதுரை தமுக்கம் மைதானத்தில் மார்ச் 13, 14, 15 தேதிகளில் நடைபெறவுள்ள மாநில அளவிலான கபடி விளையாட்டுப் போட்டிகளுக்கான கால்கோள் விழா இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

மதுரை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கபடி விளையாட்டுப் போட்டிகள் மார்ச் 13, 14, 15 ஆகிய 3 நாட்கள் தமுக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில், முதல் மூன்று இடங்களைப் பெறும் அணியினருக்கு தலா ரூ.1 லட்சம், ரூ. 75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் உள்பட மொத்தம் ரூ.54 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது.

அதனை முன்னிட்டு இன்று மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கபடி விளையாட்டுப் போட்டிகளுக்கான கால்கோள் விழா இன்று மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் ச.விசாகன் முன்னிலை வகித்தார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ந.லெனின் வரவேற்றார்.

இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வருவாய், பேரிடர், மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர். இவ்விழாவில், மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா, மதுரை தேனி கூட்டுறவு சங்கத் தலைவர் எம்.எஸ்.பாண்டியன், தமிழ்நாடு கூட்டுறவு இணைய தலைவர் ஜெ.ராஜா, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மதுரை மண்டல முதுநிலை மேலாளர் புண்ணியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT