மின்வெட்டு இல்லை என்று முதல்வர் கூறியதை தமிழக மக்கள் ஏற்க தயாராக இல்லை என்று ஜி.கே வாசன் கூறியுள்ளார்.
மதுரையில் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ''மின்வெட்டு இல்லை என்று முதல்வர் கூறியதை தமிழக மக்கள் ஏற்க தயாராக இல்லை. நன்மை பயக்கும் அரசாக ஆளும் அரசு செயல்பட வேண்டும்.
விழுப்புரத்தில் நடந்ததைப் போல் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படாமல் தடுக்க வேண்டும். தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி மாநாடு டிசம்பர் அல்லது ஜனவரியில் நடக்கும்'' என்று ஜி.கே வாசன் பேசினார்.