தமிழகம்

ரூ.5 கோடி வரி நிலுவை: மத்திய அரசு அலுவலகம், பள்ளி, வங்கி, அடுக்குமாடி குடியிருப்பு முன் குப்பைத்தொட்டி வைத்த சிவகங்கை நகராட்சி 

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி சார்பில் சொத்து குடிநீர் உள்ளிட்ட நிலுவை வரிகள் வசூலிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

நகராட்சி வருவாயை அதிகரிக்கும் நோக்கில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதிக நிலுவை வைத்திருக்கும் அரசு மற்றும் தனியார் அலுவலகம் முன்பு குப்பைத் தொட்டிகள் வைத்து உரிமையாளர்களுக்கு நெருக்குதல் கொடுக்கும் முறையும் தற்போது அவ்வப்போது பின்பற்றப்பட்டு வருகிறது.

காரைக்குடி நகராட்சியில் அரசு அலுவலகங்கள் , தனியார் கட்டிடங்கள் , பள்ளிகள் , அடுக்குமாடி குடியிருப்பு , வீடுகள் என சுமார் ரூ.5 கோடி வரி பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காரைக்குடி நகராட்சி பகுதிகளில் ஐசிஐசி வங்கி , மத்திய அரசு பிஎஸ்என்எல் அலுவலகம் ,அடுக்குமாடி குடியிருப்பு ,தனியார் பள்ளி என வரி நிலுவை தொகையை வசூலிப்பதற்காக கேட் முன்பு குப்பைத் தொட்டியை நகராட்சி ஊழியர்கள் வைத்து அதில் குப்பையைக் கொட்டி சென்றனர்.

மேலும் பள்ளி கேட் முன்பு குப்பைத்தொட்டி வைத்துள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT