தமிழகம்

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்து சம்பவம்: கமலிடம் விசாரணை நடத்தியதற்கு மநீம கண்டனம்

செய்திப்பிரிவு

‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கமல்ஹாசனிடம் விசாரணை நடத்தியதற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் மாநிலச் செயலாளர் (நற்பணி இயக்க அணி)ஆர்.தங்கவேலு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த பிப்ரவரி 19-ம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் உதவி இயக்குநர் உட்பட 3 ஊழியர்கள் உயிரிழந்தனர். இதற்காக எங்கள் தலைவரை சாட்சி என்ற பெயரில் காவல் நிலையத்துக்கு வரவழைத்து 3 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். இது கண்டனத்துக்குரியது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்து வரும்ஊழல் ஆட்சியை ஒழிக்கும்எண்ணத்தில் 2018-ல் மக்கள்நீதி மய்யம் என்ற கட்சியைதொடங்கி முதல் தேர்தலிலேயே கணிசமான வாக்குகளை பெற்று மக்களிடம் ஆதரவு பெற்றுள்ளோம். எங்கள் வளர்ச்சியை பிடிக்காத தமிழக அரசு, காவல்துறை மூலமாக சாட்சி என்றபெயரில் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளது. இந்த செயலை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT