ரஜினிகாந்த் தனது போயஸ் தோட்டம் இல்லத்துக்கு காவல் துறையின் பாதுகாப்பு வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். காவல் துணை ஆணையர் நேரில் சென்று பேச்சு நடத்தியதை அடுத்து, 2 காவலர்கள் மட்டும் பாதுகாப்புக்கு இருக்க ரஜினி ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் நடந்த துக்ளக் விழாவில் பெரியார் மற்றும் முரசொலி குறித்து ரஜினி பேசிய தற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ரஜினிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அவரது வீட்டையும் முற்றுகையிட முயன் றனர். இதற்கிடையில், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இந்த சம்பவங்களை தொடர்ந்து ரஜினி வீட்டுக்கு பாதுகாப்பு போடப் பட்டது. ஒரு காவல் உதவி ஆய் வாளர் தலைமையில் 5 காவலர்கள் ரஜினி வீடு முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்.
இந்த சூழலில், கடந்த 2 நாட் களுக்கு முன்பு பாதுகாப்புக்கு நின்றிருந்த காவலர்களை வேண் டாம் என ரஜினி திருப்பி அனுப்பிவிட்டார்.
இதுதொடர்பாக ரஜினி தரப் பில் கேட்டதற்கு, ‘‘அரசியல், கலைத்துறை தொடர்பாக மனதில்பட்ட கருத்துகளை ரஜினி அவ் வப்போது வெளிப்படையாக கூறிவருகிறார். இவ்வாறு பேசும் போது அதற்கு பாராட்டுகளும், விமர்சனங்களும் இருக்கத்தான் செய்யும். இதற்காக வீட்டை சுற்றி காவல் துறையின் பாதுகாப்பு தேவை இல்லை என்று அவர் கருதுகிறார். அதனால்தான், தன் வீட்டுக்கு பாதுகாப்பு வேண்டாம் என காவல் துறையினரிடம் தெரி வித்துள்ளார்’’ என்று கூறப்பட்டது.
ஆனால், ரஜினி முக்கிய பிரமுகர் என்பதாலும், சட்டம் ஒழுங்கு கருதியும் தொடர்ந்து அவரது வீட்டுக்கு பாதுகாப்பு வழங்க சென்னை காவல்துறை முடிவெடுத்தது.
இதையடுத்து, சென்னை பெரு நகர காவல் துறையின் நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் திரு நாவுக்கரசு நேற்று போயஸ் தோட்டம் இல்லத்துக்குச் சென்று ரஜினியை சந்தித்து பேசினார்.
போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு அவரிடம் ரஜினி அப்போதும் கேட்டுக் கொண்டுள்ளார். தற்போதைய சூழலில் போலீஸ் பாதுகாப்பை ஏற்றுக்கொள்ளுமாறு துணை ஆணையர் திருநாவுக்கரசு வலி யுறுத்தி கூறியுள்ளார். இதை யடுத்து, 2 போலீஸார் மட்டும் பாது காப்புக்கு இருக்க ரஜினி ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.