இந்தியாவின் மருத்துவ தலைநகர மாக சென்னை மாறியுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீன ஆண் கருத்தடை மையம், மாணவர்கள் கூட்டுறவு பண்டக சாலை திறப்பு விழா நேற்று நடந் தது. மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) எஸ்.கீதாலட்சுமி தலைமை தாங்கினார். மருத்துவ மனை டீன் நாராயணபாபு, டாக்டர்கள் தேவிமீனா, முத்துலதா, திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா ஆகியோர் நவீன ஆண் கருத்தடை மையம், மாணவர்கள் கூட்டுறவு பண்டக சாலையை திறந்துவைத்தனர். அதன்பின், மருத்துவமனை வளாகத்தை மேம்படுத்தி பூங்காக்கள், உயர் மின்விளக்கு கோபுரம் அமைத்தல் குறித்து பொதுப்பணித்துறை மற்றும் மருத்துவத்துறை அலுவலர் களுடன் ஆலோசனை நடத்தி மதிப்பீடுகளை தயாரித்து வழங்கு மாறு தெரிவித்தனர்.
விழாவில் அமைச்சர் சி.விஜய பாஸ்கர் பேசும்போது, ‘‘மருத் துவத்துறையில் இந்தியாவி லேயே முதல் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்தியா வின் மருத்துவ தலைநகரமாக சென்னை மாறியுள்ளது. காப் பீட்டுத் திட்டம் மூலம் கடந்த ஆட்சி யில் அரசு மருத்துவமனைகள் ரூ.12 கோடி மட்டுமே வருவாய் ஈட்டின. ஜெயலலிதா தலைமையிலான இந்த ஆட்சியில் அரசு மருத்துவ மனைகள் ரூ.910 கோடியை வரு வாயாக பெற்றுள்ளன. கீழ்ப்பாக் கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனை மட்டும் ரூ.24 கோடி வருவாய் பெற்று பல்வேறு நவீன கருவிகளை அந்த நிதியிலிருந்து வாங்கியுள்ளது’’ என்றார்.