தமிழகம்

கிராம பஞ்சாயத்து தேர்தலில் காங்கிரஸ் கவனம் செலுத்த வேண்டும்: பஞ்சாயத்து ராஜ் சங்கதன் அமைப்பின் தேசிய தலைவர் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

கிராம பஞ்சாயத்து தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் கவனம் செலுத்த வேண்டும் என ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் அமைப்பின் தேசிய தலைவர் மீனாட்சி நடராஜன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் சார்பில் தமிழகத்தில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதி களின் சந்திப்பு நிகழ்ச்சி தமிழக காங் கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. அதில் மீனாட்சி நடராஜன் பேசியது:

சாதாரண மக்களுக்கும் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்பதற் காக பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை ராஜீவ் காந்தி கொண்டு வந்தார். அதன் மூலம் அதிகாரங்கள் கிராமங்கள் வரை பரவலாகின.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறு வதன் மூலம் மக்களுக்கான திட்டங் களை நிறைவேற்ற முடியும். எனவே, கிராம பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெறுவதில் காங்கிரஸ் கட்சியினர் கவனம் செலுத்த வேண்டும். விரைவில் மாநில அளவில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடத்தப்படும் என்றார்.

இந்தக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தேசிய அமைப்பாளர்கள் பி.எம்.சந்தீப், அனில் அக்காரே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT