தமிழகம்

தூத்துக்குடியில் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் சிஏஏ ஆதரவுப் பேரணி: சசிகலா புஷ்பா உள்ளிட்ட பாஜகவினர் பங்கேற்பு

ரெ.ஜாய்சன்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக தூத்துக்குடியில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவினர் இன்று (வெள்ளிக்கிழமை) பேரணி நடத்தினர்.

தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகில் இருந்து பேரணி தொடங்கியது.

இந்தப் பேரணியில், அண்மையில் பாஜகவில் இணைந்த சசிகலா புஷ்பா எம்பி, தேசிய மகளிரணி செயலாளர் விக்டோரியா கவுரி, மாவட்டத் தலைவர்கள் பி.எம். பால்ராஜ், பி.ராமமூர்த்தி, இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்ற பேரணியை வேம்படி இசக்கியம்மன் கோயில் அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

இதனையடுத்து முக்கிய நிர்வாகிகள் மட்டும் வாகனங்களில் ஆட்சியர் அலுவலகம் சென்று மனு அளித்தனர்.

SCROLL FOR NEXT