தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியனின் அண்ணன் வீடுமற்றும் நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.
ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர் சி.த.செல்லபாண்டியன். தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளராக இருந்தவர். தற்போது, அதிமுகஅமைப்பு செயலாளராக உள்ளார்.
சி.த.செல்லபாண்டியனின் அண்ணன் சி.த.சுந்தரபாண்டியனுக்கு சொந்தமான, தூத்துக்குடியில் உள்ள காமராஜர் காய்கனி மார்க்கெட், அங்குள்ள அலுவலகம், ஸ்டார் ஓட்டல், திரையரங்கம், தங்கும் விடுதி, மில்லர்புரத்தில் உள்ள வீடு, சிட்பண்ட் அலுவலகம், பாளையங்கோட்டை சாலையிலுள்ள பெட்ரோல் பங்க், மீன்வள கல்லூரி அருகேயுள்ள தொழில் நிறுவனம், இருசக்கர வாகன விற்பனையகம் உள்ளிட்டவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
காய்கறி கடைகள் அடைப்பு
காலை 9 மணிக்கு தொடங்கியசோதனை இரவு வரை நீடித்தது.வருமான வரித் துறை சோதனையால் காய்கறி மார்க்கெட்டில் கடைகள் அடைக்கப்பட்டன.
காய்கறி வாங்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர் வருமான வரித் துறை அதிகாரிகளின் சோதனை விவரம் உடனடியாக தெரியவில்லை.