தமிழகம்

வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் கூட்டமைப்பினர் முதல்வர் பழனிசாமியுடன் சந்திப்பு

செய்திப்பிரிவு

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்தி வரும் முஸ்லிம் அமைப்பினர், முதல்வர் பழனிசாமியை அவரது முகாம் அலுவலகத்தில் நேற்றிரவு சந்தித்தனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதே நேரத்தில் சட்டத்துக்கு ஆதரவாக பேரணிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 14-ம் தேதி போராட்
டம் நடத்தினர். அப்போது, போலீஸார் தங்கள் மீது தடியடி நடத்தியதாக குற்றம்சாட்டிய முஸ்லிம்கள், இதற்கு கண்டனம் தெரிவித்தும், குடியுரிமைச் சட்டதுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் வண்ணாரப்பேட்டையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 14-வது நாளாக நேற்றும் போராட்டத்தை தொடர்ந்தனர்.

குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பாஜகவினர் இன்று பேரணி நடத்த உள்ளனர். இந்நிலையில், வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முஸ்லிம் கூட்டமைப்பினர் 12 பேர் நேற்றிரவு முதல்வர் பழனி
சாமியை சந்தித்து பேசினர். அப்போது, ‘குடியுரிமைச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என பேரவையில் தீர்
மானம் நிறைவேற்ற வேண்டும். அதுவரை போராட்டத்தை கைவிட மாட்டோம்’ என முதல்வரிடம் அவர்கள் உறுதியுடன்
கூறியதாக தெரிகிறது.

SCROLL FOR NEXT