காசிமேடு ரவுடி கொலை வழக்கில் தலைமறைவாக உள்ளகுற்றவாளிகளைக் கைது செய்யபோலீஸார் தனிப்படை அமைத்துள்ளனர்.
காசிமேடு, சிங்காரவேலன் நகர், 2-வது தெருவைச் சேர்ந்தவர் திவாகரன்(28). இவர் மீது 3 கொலை முயற்சி வழக்கு உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காசிமேடு கடல்உணவு வியாபாரிகள் நல சங்கம் எதிரே இவர் நடந்து சென்ற போது, இருசக்கர வாகனங்களில் வந்த 8 பேர் கும்பல் திவாகரனை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளது.
தகவல் அறிந்து காசிமேடு காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்தனர். திவாகரனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதைத் தொடர்ந்து தலைமறைவாக உள்ள கொலையாளிகளைப் பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்துள்ளனர். முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டாரா? ரவுடிகள் மோதல் காரணமா? என்ற கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
6 பேர் சரண்
மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளிகளை அடையாளம் காணும் பணியும்நடைபெற்று வருவதாக போலீஸ்தரப்பில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
இதற்கிடையே, கொலையில் தொடர்புடைய 6 பேர் நேற்று சரணடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.