பிறந்த குழந்தைகளுக்கு அதிமுக சார்பில் தங்க மோதிரம் 
தமிழகம்

ஜெயலலிதா பிறந்தநாள்: புதுச்சேரி அரசு  மருத்துவமனையில் பிறந்த 36 குழந்தைகளுக்கு அதிமுக சார்பில் தங்க மோதிரம்

செ.ஞானபிரகாஷ்

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரி அரசு மருத்துவமனையில் பிறந்த 36 குழந்தைகளுக்கு அதிமுக சார்பில் தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாள் கடந்த 24-ம் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. மேலும், ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, கடந்த ஒரு வாரமாக புதுச்சேரியில் அதிமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில், அதிமுக சட்டப்பேரவைக் கட்சி தலைவர் அன்பழகன் தலைமையில் ஜெயலலிதா பிறந்த தினத்தன்று புதுச்சேரியில் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி புதுச்சேரியில் பிறந்த 36 குழுந்தைகளுக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டப்பேரவை கட்சி தலைவர் அன்பழகன் இன்று (பிப்.27) தங்க மோதிரம் வழங்கினார். நிகழ்ச்சியின்போது ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT