போராட்டக் களத்தில் வளைகாப்பு 
தமிழகம்

சிஏஏ போராட்டக் களத்தில் இந்து பெண்ணுக்கு வளைகாப்பு நடத்திய முஸ்லிம் பெண்கள்

செய்திப்பிரிவு

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக சென்னை, வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின்போது பெண் ஒருவருக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.

குடியுரிமை சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், அதற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், சென்னை, வண்ணாரப்பேட்டையில் கடந்த 10 தினங்களுக்கு மேலாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இரவு, பகலாக நடைபெற்று வரும் இந்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், நேற்று (பிப்.26) அப்பகுதியைச் சேர்ந்த பாக்யலட்சுமி என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு இந்து முறைப்படி வளைகாப்பு நடத்தப்பட்டது.

போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த முஸ்லிம் பெண்கள் அவருக்கு வளையல் அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர். வளைகாப்பு நிகழ்ச்சியின்போது வழங்கப்பட்ட தாம்பூலப் பையில் 'இஸ்லாமியர்கள் அனைவரும் எங்கள் தொப்புள் கொடி உறவுகளே! நோ சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி' ஆகிய வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

கடந்த 17-ம் தேதி இதே போராட்டக்களத்தில் முஸ்லிம் தம்பதியருக்குத் திருமணம் நடைபெற்றது. இதேபோன்று, கோவையிலும், குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான போரடடத்தில் திருமணம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT