தேர்தலுக்கு முன்பு ‘மக்கள் சேவகி’ என்ற பெயரைச் சம்பாதித்து வைத்திருந்தார் கரூர் காங்கிரஸ் எம்பி-யான ஜோதிமணி. ஆனால், இப்போது அவர் தங்களை விட்டு வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டதாக தொகுதி மக்கள் வசைபாடுகிறார்கள். தொகுதியில் நடக்கும் விழாக்களில் மட்டும் பிரகாசம் காட்டிவிட்டுப் போகும் ஜோதிமணியை, ஏதாவது பிரச்சினை என்றால் அலைபேசி, வாட்ஸ் - அப், முகநூல் எது வழியாகவும் தொடர்பு கொள்ள முடியவில்லையாம்.
இதனால் வெறுத்துப் போன ராஜேந்திரன் என்பவர், ‘இதேநிலை நீடித்தால் உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு தேவையான உத்தரவுகளைப் பெற நேரிடும்’ என ஜோதிமணிக்கு எதிராக திறந்த மடல் ஒன்றை எழுதி சமூக வலைதளத்தில் வலம்வர விட்டிருக்கிறார்.
- காமதேனு இதழிலிருந்து (மார்ச் 1, 2020)