தமிழகம்

முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் 88-வது பிறந்தநாள்: மதுரையில் திமுகவினர் மரியாதை

செய்திப்பிரிவு

மதுரையில் திமுக முன்னாள் சபாநாயகரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் 88-வது பிறந்ததினம் கொண்டாடப்பட்டது.

இதனை, முன்னிட்டு பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் திருஉருவ சிலைக்கு அவரின் மகனும், திமுக மாநில தகவல் தொழில் நுட்ப அணிச்செயலாளரும் , மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பழனிவேல் தியாகராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இந்நிகழ்வில், மாவட்டச் செயலாளர் கோ.தளபதி, வேலுச்சாமி, மிசா பாண்டியன், ஜெயராமன், தமிழரசி, அக்ரி கணேசன்,பொன்வசந்த், சரவணபாண்டியன், இளமகிழன், வழக்கறிஞர் பழனிச்சாமி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT