பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தலுக்காக 200 வார்டுகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை சென்னை மாநக ராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று வெளியிட்டார். உடன் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் பி.குமாரவேல் பாண்டியன். 
தமிழகம்

சென்னை மாநகராட்சி தேர்தலில் 200 வார்டுகளுக்கான வரைவு- வாக்குச்சாவடி பட்டியலை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டார்

செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தலுக்காக 200 வார்டுகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களை சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று வெளியிட்டார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தலுக்காக 200 வார்டுகளுக்கான வார்டு வாரியான வாக்குச்சாவடி பட்டியல் தயாரிக்கப் பட்டுள்ளது. அதன்படி, ஆண் வாக்காளர்களுக்காக 135 வாக்குச்சாவடிகளும், பெண் வாக்காளர்களுக்காக 135 வாக்குச்சாவடிகளும், அனைத்து வாக்காளர்களுக்காக 5,489 வாக்குச்சாவடிகளும் ஆக மொத்தம் 5,759 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த பட்டியல்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி ஆணையருமான கோ.பிரகாஷ் வெளியிட்டார். வரைவு வாக்குச்சாவடி பட்டியல் பிப்.26-ம் தேதி முதல் அனைத்து வார்டு அலுவலகங்கள், மண்டல அலுவலகங்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆணையர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய் அலுவலர் ஆகிய அலுவலங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT