தமிழகம்

உயர் நீதிமன்றத்தில் வேலைவாங்கித் தருவதாக கூறி ரூ. 37 லட்சம் மோசடி செய்த வழக்கறிஞர் கைது

செய்திப்பிரிவு

சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.37 லட்சம் மோசடி செய்த முசிறியைச் சேர்ந்த வழக்கறிஞரை நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்தவர் பி.சதீஸ்குமார் (35). இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இவர் நாமக்கல் மாவட்டம், முட்டாஞ்செட்டியைச் சேர்ந்த கலைசெல்வன், கனிமொழி தம்பதி மகன் அடல்பிஹாரி அலெக்சாண்டருக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் எழுத்தாளார் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். இதற்காக ரூ.4.50 லட்சம் வழங்க வேண்டும், எனவும் தெரிவித்துள்ளார்.

இதை உண்மையென நம்பி சதீஸ்குமார் வங்கி கணக்கில் ரூ. 3.50 லட்சத்தை கலைச்செல்வன் செலுத்தியுள்ளார். மேலும், நேரில் ரூ.1 லட்சம் ரொக்கமாகவும் வழங்கி உள்ளார். எனினும், வழக்கறிஞர் சதீஸ்குமார் கூறியபடி வேலை எதுவும் வாங்கித் தரவில்லை. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கனிமொழி புகார் அளித்தார்.

11 பேரிடம் மோசடி

புகாரின்பேரில் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இதுபோல் 11 பேரிடம் வழக்கறிஞர் சதீஸ்குமார் மோசடி செய்தது தெரியவந்தது. இதற்காக ரூ.37 லட்சத்து 8 ஆயிரம் வாங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து முசிறியில் பதுங்கி இருந்த சதீஸ்குமாரை, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சதீஸ்குமார் 
வங்கி கணக்கில் ரூ. 3.50 லட்சத்தை கலைச்செல்வன் செலுத்தியுள்ளார். மேலும், நேரில் ரூ.1 லட்சம் ரொக்கமாகவும் வழங்கி உள்ளார்.

SCROLL FOR NEXT