தமிழகம்

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் பணியாளர் சங்கத்தினர் முற்றுகை: பணிப் பாதுகாப்பு வழங்க கோரி மனு

செய்திப்பிரிவு

பணிப் பாதுகாப்பு வழங்கக்கோரி டாஸ்மாக் தலைமை அலுவல கத்தை முற்றுகையிட்டு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத் தினர்.

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் கள் சங்கத்தினர் (திருவள்ளூர் மாவட்டம்), பணிப் பாதுகாப்பு உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அலுவல கத்தை நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.தனசேகரன் தலை மையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் நா.பெரிய சாமி, செயலாளர்கள் பி.எம்.மணி கண்டன், கே.கோவிந்தராஜ், திரு வள்ளூர் மாவட்டத் தலைவர் டி.குமார், செயலாளர் சி.மாரி, பொருளாளர் டி.எஸ்.நாராயண ராஜு உள்ளிட்ட 200 பேர் பங்கேற் றனர். அதன்பின் டாஸ்மாக் மேலாண்மை அலுவலகத்தில் அதிகாரிகளைச் சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

15 கோரிக்கைகள்

இதுதொடர்பாக டி.தனசேகரன் கூறும்போது, “டாஸ்மாக் பணியா ளர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். மதுக்கடை களில் பணிபுரியும் பணியாளர் களுக்கு ரூ.25 லட்சம் காப்பீடு செய்து, அதற்கான மாதத் தவ ணைத் தொகையை நிர்வாகமே செலுத்த வேண்டும். பணி விடுப் பில் உள்ள அனைத்து பணியா ளர்களுக்கும் உடனடியாக பணி வழங்க வேண்டும். பணியாளர் களுக்கு மருத்துவ பாதுகாப்பை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 கோரிக்கைகள் அடங் கிய மனுவை கொடுத்துள்ளோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT