தமிழகம்

வன்முறையில் ஈடுபடுவோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குக: சரத்குமார் ட்வீட்

செய்திப்பிரிவு

வன்முறையில ஈடுபடுவோரை அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க நடிகரும் சமக தலைவருமான சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் தொடர்ந்து 3-வது நாளாக கலவரம் நடந்து வருகிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்ட மக்கள், போலீஸார் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் சரத்குமார் தனது ட்விட்டரில், "சிஏஏ என்ற பெயரில் நடந்தேறும் வன்முறை, நாட்டின் ஒற்றுமையையும் அமைதியையும் குலைக்கும் எந்த ஒரு செயலும் இனி தொடராமல் செய்வது நமது ஒவ்வொருவரது கடமை. அரசாங்கம் பாரபட்சமின்றி வன்முறையில ஈடுபடும் எவராக இருந்தாலும் இரும்பு கரம் கொண்டு அடக்கவேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT