தமிழகம்

அடையாறு, குரோம்பேட்டையில் கல்யாண் ஜுவல்லர்ஸ் புதிய கிளைகள் பிரபு, நாகார்ஜுனா திறந்துவைத்தனர்

செய்திப்பிரிவு

சென்னையில் தி.நகரைத் தொடர்ந்து அடையாறு, குரோம் பேட்டையில் கல்யாண் ஜுவல் லர்ஸ் புதிய கிளைகள் நேற்று திறக்கப்பட்டன. இப்புதிய கிளைகளை நடிகர்கள் பிரபு, நாகார்ஜுனா திறந்துவைத்தனர்.

தங்கம் மற்றும் வைர நகை விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனம் கல்யாண் ஜுவல்லர்ஸ். இந்நிறுவனத்துக்கு இந்தியாவில் 73 கிளைகள் உட்பட உலகம் முழுவதும் 85 கிளைகள் உள்ளன. சென்னை தி.நகரில் கல்யாண் ஜுவர்ல்லர்ஸ் தலைமை ஷோரூம் சமீபத்தில் திறக்கப்பட்டது. மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சியில் இந்தி நடிகர் அமிதாப்பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், மலையாள நடிகை மஞ்சு வாரியர், நடிகர் பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

தி.நகரை தொடர்ந்து அடையாறு, குரோம்பேட்டையில் அமைக்கப் பட்டுள்ள கல்யாண் ஜுவல்லர்ஸின் புதிய கிளைகள் திறப்பு விழா நேற்று நடந்தது. அடையாறில் சர்தார் பட்டேல் சாலையில் 10 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய கட்டிடத்தில் புதிய கிளை நேற்று காலை திறக்கப்பட்டது. குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் 20 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 2 தளங்களுடன் கூடிய கிளை நேற்று மதியம் திறக்கப்பட்டது. இரு கிளைகளையும் நடிகர் பிரபு, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா ஆகியோர் கூட்டாக திறந்துவைத்தனர். அங்கு விதவிதமான தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டின நகைகளை அவர்கள் பார்வையிட்டனர்.

புதிய கிளைகள் திறப்பு விழாவில் கல்யாண் ஜுவல்லர்ஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டி.எஸ்.கல்யாணராமன், செயல் இயக்குநர்கள் ராஜேஷ் கல்யாணராமன், ரமேஷ் கல்யாணராமன், ஊழியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

குரோம்பேட்டை கிளை திறப்பு விழாவின்போது பிரபு, நாகார்ஜுனாவை காண ஏராளமான ரசிகர்கள், பொதுமக்கள் கடை முன்பு திரண்டதால், ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கூட்டத்தை போலீஸார் ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.

விரைவில் மேலும் 2 கிளைகள்

சென்னையில் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம் இதுவரை தொடங்கியுள்ள தி.நகர், அடையாறு, குரோம்பேட்டை ஆகிய 3 கிளைகளிலும் ரூ.750 கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வேளச்சேரி, அண்ணா நகரில் புதிய கிளைகளைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளது.

SCROLL FOR NEXT