கடந்த சில நாட்களாகவே உயர்ந்து வரும் தங்கம், வெள்ளி விலை இன்று சற்றே குறைந்துள்ளது.
சென்னையில் இன்று (பிப்.26) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,061 ஆக உள்ளது.
நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று சவரனுக்கு ரூ.248 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ரூ.32,488-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.52.40-லிருந்து 51.20 ரூபாயாகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.51,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.