தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி தருவது குறித்து கட்சி தலைமை முடிவு எடுக்கும் என திருச்சி முக்கொம்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் காலியாக உள்ள 55 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு மார்ச் 26-ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் முதல்வர் இதைத் தெரிவித்துள்ளார்.
வேளாண் பாதுகாப்பு மண்டலம் குறித்து பேசுகையில், "மாநில அரசின் முழு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்பாட்டில் உள்ள மாவட்டங்களை எல்லாம் பாதுகாக்கும் நோக்கிலேயே சிறப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்றார்.