தமிழகம்

அடையாறு ஆற்றை மாசுபடுத்துவோர் மீது வழக்கு தொடர்ந்து இழப்பீடு வசூலிக்க வேண்டும்- அரசு துறைகளுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

செய்திப்பிரிவு

அடையாறு ஆற்றில் கழிவுநீரை கலந்து மாசுபடுத்துபவர்கள் மீது வழக்கு தொடர்ந்து, இழப்பீடு வசூலிக்குமாறு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு உத்தரவிட்டுள்ளது.

‘சென்னை விமான நிலையத் தின் பின்புறம் செல்லும் அடையாறு ஆற்றில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கழிவுநீர், ரசாயனங்கள் விதிகளை மீறி கலக்கப்படுகின்றன. இதில் உள்ள அதிக அளவிலான ரசாயன பொருட்கள் நீர்நிலைகளில் நுரை உருவாக காரணமாகின்றன’ என் பதை சுட்டிக்காட்டி, ஒரு நாளிதழில் கடந்த 17-ம் தேதி புகைப்படம் வெளி யானது. இதை அடிப்படையாக கொண்டு, தேசிய பசுமை தீர்ப் பாயத்தின் தென்மண்டல அமர்வு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.

அமர்வின் நீதித் துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ் ணன், தொழில்நுட்ப உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் முன்பு சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

அடையாறு முகத்துவாரப் பகுதியில் அதிக அளவில் நுரை ஏற்பட்டது எங்கள் கவனத்துக்கும் வந்துள்ளது. நீர்நிலைகளை மாசு படாமல் காப்பது உள்ளாட்சி அமைப்புகளின் கடமை. சுத்திகரிக் கப்படாத எந்த வகையான கழிவு நீரையும் நீர்நிலைகளில் விடக் கூடாது. இது ஆற்றை மட்டுமல் லாது, கடல்சார் சூழலையும் பாதிக்கும்.

சென்னை மெரினா கடற்கரை யில் அதிக அளவில் நுரை உரு வானது தொடர்பாக ஏற்கெனவே வந்த நாளிதழ் செய்திகள், இன்ஸ் டாகிராம் தகவல்களின் அடிப் படையில் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் அடையாறு ஆற்றின் சுற்றுச்சூழலை பாதுகாக் கும் வகையில் சென்னை மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர், சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இதன் ஒருங்கிணைப்பு அதிகாரி யாக சென்னை மாநகராட்சி ஆணையர் செயல்படுவார்.

அடையாறு ஆறு மற்றும் அது கடலில் சேரும் இடம் ஆகிய பகுதிகளில் இக்குழுவினர் ஆய்வு செய்து, உண்மை நிலை குறித்தும், ஆற்றின் சூழலை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித் தும் 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

விதிகளை மீறி ஆற்றை மாசுபடுத்துபவர்களை கண்ட றிந்து, அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து, ஆற்றின் சுற்றுச்சூழல் இழப்பை ஈடுசெய்யும் வகையில் அபராதம் வசூலிக்க வேண்டும். குழு சமர்ப்பிக்கும் அறிக்கையில் இந்த விவரங்களும் இடம்பெற வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட் டுள்ளது.

அடுத்தகட்ட விசாரணை மே 28-ம் தேதிக்கு தள்ளிவைக்கப் பட்டது.

SCROLL FOR NEXT