தமிழகம்

முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 1,115 பெண் பயனாளிகளுக்கு ரூ.5 கோடி முதிர்வு தொகை: அமைச்சர் சரோஜா வழங்கினார்

செய்திப்பிரிவு

முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 1,115 பெண்களுக்கு ரூ.4 கோடியே 93 லட்சம் மதிப்பில் முதிர்வு தொகைக்கான காசோலையை அமைச்சர் சரோஜா வழங்கினார்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள சமூகநலக் கூடத்தில் சமூகநலத் துறையின் சார்பில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவுக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி தலைமை தாங்கினார்.

சமூகநலத் துறை அமைச்சர் வி.சரோஜா முன்னிலையில் விழாவில் பங்கேற்ற அனைவரும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதி மொழியை ஏற்று கொண்டனர். தொடர்ந்து, முதல மைச்சர் பெண் குழுந்தை பாது காப்பு திட்டத்தின்கீழ் 1,115 பெண் களுக்கு ரூ.4 கோடியே 93 லட்சத்து 5 ஆயிரத்து 226 மதிப்பிலான முதிர்வு தொகைகளுக்கான காசோலைகளை அமைச்சர் வி.சரோஜா வழங்கினார்.

பின்னர், விழாவில் அமைச்சர் சரோஜா பேசியதாவது:

பெண் குழந்தைகளை கருவி லேயே அழிக்கும் அநீதியைத் தடுக் கவே தொட்டில் குழந்தைத் திட்டம் முன்னாள் முதல்வர் ஜெயலலி தாவால் தொடங்கப்பட்டது. இத் திட்டத்தின் மூலம், 5,943 குழந் தைகள் பெறப்பட்டுள்ளன.

இவற்றில், 4,330 பெண் குழந் தைகள், 1,148 ஆண் குழந்தை களாகும்.

தத்துவள ஆதார மையம்

இக்குழந்தைகளில் 4,035 பெண் குழந்தைகள், 1,413 ஆண் குழந் தைகள் தத்துவள ஆதார மையங் களின் மூலம் உள்நாட்டிலேயே தத்து அளிக்கப்பட்டுள்ளன. 391 பெண் குழந்தைகளும், 109 ஆண் குழந்தைகளும் வெளிநாட்டுக்கு தத்து அளிக்கப்பட்டுள்ளன.

மேலும், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் இதுவரை 11 லட்சத்து 20 ஆயிரம் பேர் இணைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் அவரவர் பெயரில் ரூ.1,432 கோடி நிலையான வைப்பு தொகையாக வைக்கப்பட்டு உள்ளது.

மக்கள் மனதில் மாற்றம்

18 வயது அடையும்போது அளிக்கப்படும் முதிர்வுத் தொகை உயர்கல்வி, திறன்மேம்பாடுக்குப் பயன்படுவதாக அமைந்து வரு கிறது. இதுபோன்ற பல்வேறு திட் டங்களால் பெண் குழந்தைகளை வெறுத்து ஒதுக்கிய பெற்றோர் அரவணைத்து பாதுகாக்கும் வகையில் மக்கள் மனங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், சமூகநலத் துறைச் செயலாளர் எஸ்.மதுமதி, சமூகநலத் துறை ஆணையர் ஆபிரகாம், சமூக பாதுகாப்புத் துறை ஆணையர் ஆர்.லால்வேனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT