தமிழகம்

புழல் சிறையில் மாணவர்கள் உண்ணாவிரதம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் மதுவிலக்கு கோரி சென்னையில் போராட்டம் நடத்திய 6 மாணவிகள் உட்பட 15 பேர் கைது செய்யப் பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட் டனர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், உட்பட பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் புழல் சிறைக்கு சென்று மாணவர்களை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை தங்களை தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினர். சிறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

மேலும் சிறையை முற்றுகையிட போவதாக மாண வர்கள் அறிவித்து இருப்ப தால், 100-க்கும் மேற்பட்ட போலீஸார் சிறைச் சாலையில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் புழல் சிறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT