தமிழகம்

என்எல்சி தொழிலாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடக்கம்

செய்திப்பிரிவு

நெய்வேலியில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள என்எல்சி தொழிலாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர். என்எல்சி சுதந்திர தினவிழாவை புறக்கணித்து, உண்ணாவிரத பந்தலிலேயே தேசியக் கொடி ஏற்ற முடிவு செய்துள்ளனர்.

ஊதிய மாற்று ஒப்பந்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி கடந்த மாதம் 20-ம் தேதி முதல் என்எல்சியில் பணியாற்றும் நிரந்தர தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வியடைந்த நிலையில், நிரந்தர தொழிலாளர் களின் போராட்டம் நீடித்தது. ஒப்பந்த தொழிலாளர்கள், பொறியாளர்கள் பணிக்குச் சென்று வந்த நிலையில், தொமுச தொழிற்சங்க தலைவர் திருமாவளவனை என்எல்சி நிர்வாகம் இரண்டு நாட்களுக்கு முன் பணி நீக்கம் செய்ததால் ஒப்பந்த தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தை தொடங்கினர். தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் நெய்வேலியில் என்எல்சி நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டவில்லை.

இதையடுத்து தொமுச, அதொஊச, சிஐடியு, ஐஎன்டியூசி, பாட்டாளி தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார் பாக போலீஸாரின் தடையை மீறி நெய்வேலியில் ஐஎன்டியூசி தொழிற்சங்க வளாகத்தில் நேற்று முதல் காலவரையற்ற உண்ணா விரத போராட்டத்தைத் தொடங்கி னர். இதில் 97 தொழிற்சங்க நிர் வாகிகள் பங்கேற்றுள்ளனர். தொழிலாளர்களுக்கு ஆதரவாக நெய்வேலி நகரில் நேற்று ஒருநாள் கடையடைப்பு நடைபெற்றது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நேற்று விடுமுறை விடப்பட்டது. ஆட்டோக்கள் ஓடவில்லை.

போராட்டம் குறித்து தொமுச செயலாளர் எஸ்.ராஜவன்னியன் கூறும்போது, “என்எல்சி நிர்வாகம் பழிவாங்கும் போக்கில் ஈடுபட்டு வருகிறது. எங்களது நிலைப் பாட்டை தெளிவாக கூறி விட்டோம். இனி முடிவெடுக்க வேண்டியது நிர்வாகம்தான். என்எல்சி நிர்வாகத் தின் சார்பில் நடைபெறும் சுதந்திர தினவிழாவையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். உண்ணா விரத பந்தலிலேயே தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்து வோம். அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு இன்று (நேற்று) அழைப்பு விடுத்தனர்.

அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்பட வாய்ப்பில்லை என்ப தால் அதை நிராகரித்து விட்டோம். நிறுவன தலைவர் மற்றும் இயக்கு நர்களுடனான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தால் மட்டுமே தொழிற் சங்கக் கூட்டமைப்பாக பேச்சு வார்த்தையில் பங்கேற்போம்” என்றார்.

இதற்கிடையே, என்எல்சி தலைவர் சுரேந்திர மோகன் கூறும்போது, “பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தோம். அவர்கள் நிராகரித்து விட்டனர்.நிறுவனத் தின் உற்பத்தியில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை ஒப்பந்த தொழிலாளர்களில் பெரும்பாலா னோர் பணிக்கு வருவதால் சுரங்கம் மற்றும் அனல்மின் நிலைய பணிகள் வழக்கம்போல் நடைபெறுகிறது” என்றார்.

SCROLL FOR NEXT