மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ் ணன் நாகர்கோவிலில் செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி நாளை (10-ம் தேதி) தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் பாஜக சார்பில் போராட்டம் நடைபெறும்.
மார்த்தாண்டம் உண்ணாமலைக் கடையில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் சசிபெருமாள் மரணம் அடைந்துள்ளார். 5 மணி நேரம் செல்போன் கோபுரத்தில் நின்று போராடிய அவரை, அதிகாரிகள் நினைத்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம்.
சசிபெருமாளின் மரணத்தை தற் கொலை வழக்காக பதிவு செய்து இருப்பதை கண்டிக்கிறோம்.
சசிபெருமாள் தற்கொலை செய்தார் என்று கூறிய எஸ்பி மீது சசிபெருமாளின் உறவினர்கள் மானநஷ்ட வழக்கு தொடருவார்கள் என்று நம்புகிறேன். காவல்துறை மீது அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசின் ஒத்துழைப்பு தேவை
சென்னை வந்த பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். அவர்கள் மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி இருப்பார்கள் எனக் கருதுகிறேன். இந்தியா வளர்ச்சி அடையும்போது தமி ழகம் முன்னிலை பெற வேண்டும். அதற்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். அந்த வகையில் மாநில அரசு பல்வேறு விஷயங்களில் இன்னும் அதிகம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
பழையாறு, ஏ.வி.எம். கால்வாய்களை சீரமைத்து நீர் வழிச்சாலைகள் ஏற்படுத் தப்படும் என்றார்.