தமிழகம்

மாணவர்கள் அவநம்பிக்கைக் கொள்ள வேண்டாம்: ஐஏஎஸ் அதிகாரி சகாயம் 

செய்திப்பிரிவு

அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால் தேர்வு முறைகேடுகள் குறித்து மாணவர்கள் அவநம்பிக்கை கொள்ள வேண்டாம் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் போட்டித் தேர்வு பயிற்சி மைய நிகழ்ச்சியில் பங்கேற்ற சகாயம் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது இதனைத் தெரிவித்தார்.

முறைகேட்டில் ஈடுபடுவோர் இளைஞர்களை நிலைகுலையச் செய்கிறார்கள் என்று குறிப்பிட்ட அவர் முறைகேட்டில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றார்.

நேர்மையான, திறனுள்ள அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கையளித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT