சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் கடுமையாக இருந்தாலும் இரவு நேரங்களில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் சென்னையில் பல இடங்களில் மழை பெய்யத் தொடங்கியது.
திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், பட்டினம்பாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும், ஆவடி, அம்பத்தூர், தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் இடியுடன் கனத்த பலத்த மழை பெய்தது. கனமழை காரணமாக சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், ஒருசில இடங்களில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இரவு 9 மணிக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்த வண்ணம் இருந்தது.