தமிழகம்

வெள்ளத் தடுப்பு; பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு இப்படித்தானா?- மாவட்டச் செயலாளர்களுக்கு ஸ்டாலின் உத்தரவு

செய்திப்பிரிவு

வெள்ளத் தடுப்பு, குடிமராமத்துப் பணிகள் என்ற பெயரால் பல்லாயிரம் கோடி ரூபாய் தமிழகம் முழுவதும் செலவழிக்கப்படுவது இந்த லட்சணத்தில் தானா? பணிகள் நடக்கிறதா? அல்லது பணிகள் நடப்பதாகக் கணக்குக் காட்டப்படுகிறதா? என்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கண்காணிக்க வேண்டும் என ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு:

''அடையாற்றில் கட்டப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புச் சுவர் தரமற்றதாக இருப்பதைக் கண்டித்து சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மா.சுப்பிரமணியம் தலைமையில் ஆற்றினுள்ளேயே இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வெள்ளத் தடுப்பு, குடிமராமத்துப் பணிகள் என்ற பெயரால் பல்லாயிரம் கோடி ரூபாய் தமிழகம் முழுவதும் செலவழிக்கப்படுவது இந்த லட்சணத்தில் தானா? பணிகள் நடக்கிறதா? அல்லது பணிகள் நடப்பதாகக் கணக்குக் காட்டப்படுகிறதா?

அனைத்து மாவட்டக் கழகங்களும் இதனைக் கண்காணிக்க வேண்டும்!''

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசின் பொதுப்பணித் துறை செயலாளருக்கு மா.சுப்பிரமணியம் எழுதியுள்ள கடிதத்தையும் ஸ்டாலின் இத்துடன் இணைத்துள்ளார்.

SCROLL FOR NEXT