சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில்பெட்ரோல் குண்டு வீச முயற்சித்தாக கைது செய்யப்பட்ட 10 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
ஆடிட்டரும் துக்ளக் ஆசிரியருமான எஸ்.குருமூர்த்தியின் வீடு மயிலாப்பூர் தியாகராஜபுரத்தில் உள்ளது. கடந்த ஜனவரி 24-ம் தேதி இவரது வீட்டின் மீது சிலர் பெட்ரோல் குண்டுகளை வீச முயன்றனர்.
இதுதொடர்பாக மயிலாப்பூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். முதல் கட்டமாக அங்குள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகள் மூலம் மயிலாப்பூர் சாரதாபுரம் சசிகுமார், பல்லக்குமா நகர் தீபன், அயனாவரம் ஜனார்தனன், ராயப்பேட்டை பாலு, பிரசாந்த், வாசுதேவன், குமரன், கண்ணன், திருவள்ளூர் சக்தி, பம்மல் தமிழ் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என மயிலாப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் பரிந்துரைத்தார்.
இதை ஏற்ற காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் 10 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தர விட்டார்.
அதன்படி, அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வர்கள் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.